பொசன் பூரணை நன்நாளில் இழைக்கப்பட்ட கடும் அநீதி!
கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லச்மன் பிரேமசந்திரவின் மனைவி, இன்று ஜனாதிபதி மன்னிப்பு பெற்ற துமிந்த சில்வா விடுதலையான பின்னர் சமூக ஊடகங்களில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாரத லச்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாக 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனை பெற்ற துமிந்த சில்வாவை விடுவித்த முடிவை சுமனா பிரேமச்சந்திர கடுமையாக கண்டித்துள்ளார்.
கொலையாளி விடுவிக்கப்பட்டார். நீதியை மதிக்காத ஒரு நாட்டின் மீது சூரியன் பிரகாசிக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை அவமதித்து நீதித்துறையை மதிக்காத ஒரு நாடாக இலங்கை மாறியுள்ளது என்று சுமனா மேலும் கூறியுள்ளார்.
இந்த அநீதி போசன் பூரணை என்ற மிக நல்ல நாளில் நடந்தது என்று அவர்
தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri