அச்சுவேலி வல்லைப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம் (Photos)
யாழ்ப்பாணம் - அச்சுவேலி வல்லைப்பகுதியில் காரொன்றும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை வல்லைப் பாலத்தின் மேல் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வழுக்கல் நிலையினால் கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிளை மோதியுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸார் விசாரணை
இதனை தொடர்ந்து குறித்த கார் எதிரே உள்ள பாலத்திற்குள் விழுந்து முழுதாக சேதமடைந்துள்ளது.
மேலும் மோட்டார்சைக்கிளும் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மோட்டார்சைக்கிளில் பயணித்தவர் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் பட்டப்பகலில் வீட்டு வாசல் முன் தாக்கப்பட்ட இந்தியர்: பதைபதைக்கவைக்கும் காட்சி News Lankasri

நடிகர் விஜயகாந்த் மகனின் காதலியை பார்த்துள்ளீர்களா.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam
