சாய்ந்தமருதில் ஆபத்தான நிலையில் உள்ள பாலம்: அச்சத்தில் மக்கள்
சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியிலுள்ள ஒடுக்கமான பாலம் பல தசாப்தங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் அந்த பாலத்தில் பயணிப்போர் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர்.
அம்பாறை - கல்முனை மாநகர சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைகள், உப தபாலகங்கள், பாடசாலை மாணவர்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் தொழில் நிமித்தமான பயணங்களை மேற்கொள்வோர் இந்த பாலத்தின் வழியே பயணிக்கின்றனர்.
எனவே அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியாக விஸ்தரிப்பு செய்யப்பட வேண்டும் என்பது சாய்ந்தமருது மக்களின் விருப்பமாகும்.
மக்கள் கோரிக்கை
இருப்பினும் இந்த பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்டு வருகின்ற மக்கள் பிரதிநிதிகள் இந்த பிரச்சினைக்கு தீர்வை தருவதாக தேர்தல் காலங்களில் மேடைகளில் வாக்குறுதி வழங்கினாலும் அவை எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அதிகாரிகள் பலரும் பல்வேறு காரணங்களை கூறிவருகின்ற நிலையில் தமக்கான உச்சகட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்க முன்வர வேண்டும் என சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
