அம்பாந்தோட்டையில் யானை தாக்கி உணவக ஊழியர் ஒருவர் படுகாயம்
அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலைக்கு அருகில் நேற்று(03.08.2026) மாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலையின் உணவக ஊழியர் ஒருவரே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணை
அவர் மற்றொரு நபருடன் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதிக்குச் சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அவருடன் சென்ற மற்றைய நபர் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து ஓடித் தப்பியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் கைதினால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு - களமிறங்கிய அதிரடிப்படையினர் - முதல்வர் பிறப்பித்த உத்தரவு