76 ஆண்டுகளின் பின்னர் வெடித்த இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு
76 வருங்களின் பின்னர், இரண்டாம் உலகப் போரின் குண்டு வெடித்துள்ளது.
ஜேர்மனின் முனிச் நகரில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
1939 செப்டம்பர் முதலாம் திகதி ஆரம்பித்த இரண்டாம் உலகப் போர் 1945 செப்டம்பர் 2ஆம் திகதி முடிவடைந்தது.
நாஸி ஜேர்மனியின் போலந்து மீதான படையெடுப்புடன் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானதாக அறியப்படுகிறது.
இந்த நிலையில் அந்த போர் முடிவடைந்து 76 வருடங்கள் கடந்தபோதிலும் அவ்வப்போது கைவிடப்பட்டு கண்டுபிடிக்கப்படாத குண்டுகள் வெடித்து வருகின்றன.
2017ஆம் ஆண்டிலும் பிராங்பேட் நகரில் 14 தொன் நிறைகொண்ட குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டபோது 70ஆயிரம் பொதுமக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதற்கு மத்தியில் பிரதான ரயில் நிலையம் ஒன்று அருகில் துளையிடும் பணி மேற்கொள்ளப்பட்டபோது உலகப் போரின் போது கைவிடப்பட்ட குண்டு வெடித்துள்ளது.
இதன்போது 4 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது இந்த குண்டு 250 கிலோ நிறைக்கொண்டதாக இருந்திருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
