இனிய பாரதியின் கைதும் வெளிக்கிளம்பும் கிழக்கின் கொலைக்கலாசரப்பட்டியலும்..
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்கள் ஒரு நெருக்கு வாரத்தை அனுபவித்த காலப்பகுதியில் அதை நிகழ்த்தியதாக சொல்லப்படும் கருணாகுழுவின் பிள்ளையானின் நெருங்கிய சகாவான இனிய பாரதி மற்றும் அவரது நண்பரான சயா தவசீலன் ஆகியோர் நேற்று குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருக்கோவிலில் முன்னாள் தவிசாளர் உதயகுமார் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டாலும் கிழக்கின் பிள்ளையானைப் போல இனியபாரதி நிகழ்த்திய அட்டூழியங்களும் அளவுகணக்கு இல்லாதவை என சொல்லப்படுகிறது.
யாருக்காக போராட புறப்பட்டார்களோ அந்த இனத்தையே அழித்தொழிக்கும் செயற்பாட்டில் தங்களை ஈடுபடுத்திய கருணா குழுவின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பின்னரான பிளவின் பின்னான அம்பாறை மாவட்டத்தை ஒரு கொலைக்களமாக்கிய நபராகவும் பலராலும் அடையாளப்படுத்தப்பட்டு காவல்துறை முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
உண்மையில் யாரிந்த இனியபாரதி பிள்ளையானுக்கும் இவருக்குமான தொடர்பு என்ன ?
இவர் அம்பாறையில் நிகழ்த்தியதாக சொல்லப்படுகின்ற கொலைகள் கடத்தல்கள் கப்பம் கோரல்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு..
