இராணுவ புலனாய்வாளர்களால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல்....
இராணுவ புலனாய்வாளர்கள் பகிரங்கமாக பல்கலைக்கழகங்களில் மாணவர் ஒன்றியம் சார்பாக இயங்கிய மாணவர்களின் பெயர்களை மரண தண்டனை விதிக்கப்படும் என்று அச்சுறுத்தினார்கள் என்று வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்த இராணுவக் கொடுமைகளை எந்தவித சர்வதேச ஸ்தாபனங்களினாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
தற்போது தென்படக்கூடிய மனிதபுதைகுழிகள் இலங்கை அரசினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டவை.
அதனை இராணுவத்தின் போர்க்குற்றமாக கூறிவிட்டு ஓரிரு இராணுவத்தின் பெயர்களை குறிப்பிட்டு விட்டு கடந்து சென்று விட முடியாது” என குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri