கருணாவின் முக்கிய சகா ஒருவர் அதிரடி கைது
கருணாவின் முக்கிய சகாக்களில் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளில் ஒருவருமான இனிய பாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை இன்று கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று(6) அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
அதிரடி கைது
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், முனைக்காடு பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முனைக்காடு பகுதியில் இனிய பாரதி தங்கியிருந்த பிரதேசத்தை இன்று அதிகாலை சுற்றி வளைத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த கைதானது இனிய பாரதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இளைஞர் யுவதிகளை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கலாக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் கெப்டன் சந்திரநேரு படுகொலை தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிள்ளையானிடம் விசாரணை
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்வழங்கிய வாக்கு மூலத்தின் பிரகாரம் இனியபாரதியை குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவதினமான இன்று காலை ரிருக்கோவில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்து அம்பாறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்;பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றம் சாட்டிவருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்குhல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலதிக தகவல்; பவன்- பாறுக் ஷிஹான்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 7 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
