இனிய பாரதியின் மிக முக்கிய சகாவான வர்த்தக செயற்பாட்டாளர் தலைமறைவு
இனிய பாரதி கைது செய்யப்பட்டதை போல அவருடைய சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
என்னுடைய தந்தையை தான் இழந்தது போல பலரும் அவர்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்களை இழந்துள்ளனர்.
தங்களுடைய இனத்திற்காக போராட சென்றவர்கள் தங்களது இனத்தை சார்ந்தவர்களையே சுட்டுக்கொன்றது தொடர்பில் தற்போது விசாரணைகள் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இனிய பாரதியின் சகாக்கள் பலர் தற்போது வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
தற்போது இனிய பாரதியின் சகாக்கள் பலரும் கைது செய்யப்படுவதால் வெளியில் உள்ள சிலர் அதிர்ச்சியில் உள்ளனர் என குறிப்பிட்டார்.
இந்த விடங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி....





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

சீனாவுக்கு புதிய நெருக்கடி... முதல் தாக்குதலுக்கு தயாராக ஜப்பான்: இந்த இடத்திலிருந்து குறி News Lankasri
