அதிரடியாக கைது செய்யப்பட்ட இனிய பாரதியின் மற்றுமொரு சகா

CID - Sri Lanka Police Ampara Pillayan Sivanesathurai Santhirakanthan
By Bavan Jul 27, 2025 02:33 PM GMT
Report

இனிய பாரதியின் சகாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அம்பாறை மாவட்ட தமிழ் பகுதிகளில் கடந்த காலத்தில் இனியபாரதி தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இயங்கி வந்த முகாம்கள் மற்றும் மயானங்களை இரண்டு தினங்களாக குற்றப் புலனாய்வு பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அம்பாறை - திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார், துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த பல சம்பவங்கள் தொடர்பில் இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை கடந்த 6ஆம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.

சகாக்கள் கைது 

இந்த கைதையடுத்து இனியபாரதியின் முன்னாள் சாரதியான செந்தூரனை கடந்த 9ஆம் திகதி பொத்துவிலில் இருந்து மட்டக்களப்புக்கு தனியார் போக்குவரத்து பேருந்து வண்டியை செலுத்தி சென்ற போது அவரை கல்முனை நகரில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட இனிய பாரதியின் மற்றுமொரு சகா | Iniya Barathy Friend Arrested Ampara Pillayan

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் இருந்து வந்த புலனாய்வு அதிகாரிகள் தம்பிலுவில் மகாவித்தியாலயத்துக்கு அருகில் பாடசாலை வீதியில் 2004ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வந்த இனிய பாரதியின் காரியாலயத்தை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வாறே தம்பிலுவில் பிரதான வீதியில் இயங்கி வந்த ரி.எம்.வி.பி முகாம், தம்பட்டையில் இயங்கி வந்த முகாம், திருக்கோவில் மயானம் போன்றவற்றுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

அத்துடன் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான் சந்திக்கு அருகாமையில் உள்ள பாரிய வீட்டை ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை வெள்ளை நிற ஆடை அணிந்து இரண்டு வெவ்வேறு ஜீப் வண்டிகளில் அழைத்து வந்து சோதனையிட்டனர்.

விசேட சோதனைகள் 

இதன் பின்னர் சம்மாந்துறையில் செயற்பட்ட முகாம் உட்பட அந்த கால பகுதியில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் ரிஎம்விபி முகாம்களாக செயற்பட்டவற்றை சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு அங்கு சந்தேகத்துக்கு இடமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலத்தை தோண்டி சோதனையிடுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட இனிய பாரதியின் மற்றுமொரு சகா | Iniya Barathy Friend Arrested Ampara Pillayan

இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த இனிய பாரதியின் மற்றுமொரு சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் அவரது வீட்டில் வைத்து இன்று மாலை 3.00 மணியளவில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை குற்றப்புலனாய்வுத்துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, 2005 மற்றும் 2008க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் குறித்து நீண்ட விசாரணையை மேற்கொண்டது.

பல்வேறு குற்றச்செயல்கள் 

குறித்த விசாரணையில், முதல் சந்தேக நபரான இனியபாரதி 2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணா பிரிவின் திருக்கோவில் பகுதியில் உள்ள ஆயுதமேந்திய முகாமின் தலைவராகப் பணியாற்றியவர்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட இனிய பாரதியின் மற்றுமொரு சகா | Iniya Barathy Friend Arrested Ampara Pillayan

இவர் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் கருணா பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றியவர்.

என்பதுடன் 2012 முதல் 2015 வரை அந்தப் பிரிவு பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியபோது பல படுகொலை மற்றும் ஆட்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US