வவுனியாவில் அரச திணைக்களங்களின் பங்குபற்றுதலுடன் நடமாடும் சேவை (Video)
வடமாகாண அரச திணைக்களங்களின் பங்குபற்றுதலுடனான நடமாடும் சேவை வவுனியா பரகும் மகா வித்தியாலத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நடமாடும் சேவை வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
வவுனியா தெற்கு பிரதேச சபைக்கான குறித்த நடமாடும் சேவையானது இன்று காலை 10 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை இடம்பெற்றுள்ளது.
அதிகளவான பொதுமக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளிற்குத் தீர்வு பெறும் நோக்குடன் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது வடமாகாண அரச திணைக்களங்களின்
தலைவர்கள் கலந்து கொண்டு, 25 அரச திணைக்களங்கள் தொடர்பான சேவையை இதன்போது பொதுமக்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







