வடக்கில் மரபுரிமை மீளுருவாக்கப் பணிகள் ஆரம்பம்: வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம்
வடக்கில் தமிழர்களின் மரபுரிமை சின்னங்கள், எச்சங்கள் என்பன மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் (P. Pushparatnam) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு நேற்றைய தினம் (04) விஜயம் செய்த தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க(Vithura Vikramanayake), நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan), தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க (Anura Manatunga), அமைச்சின் செயலாளர் நிசாந்தி ஜெயசிங்க (Nishanti Jayasinghe),
மேலதிகப் பணிப்பாளர் நிமால் (Nimal), கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் (Rupavathi Ketheeswaran) ஆகியோர் பூநகரி, கௌதாரிமுனையில் உள்ள சோழர் கால சிவாலாயமான மண்ணித்தலை சிவன் ஆலயம் யாழ். பிராந்திய தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரால் மணிமாறன், நித்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்ளின் தலைமையிலும், கெளாதாரிமுனை பிள்ளையார் ஆலயம் மேற்பார்வை செய்வதற்கு கையிலைவாசன் மற்றும் கோகிலவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டு பழைய வடிவில் மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இதற்காக இந்த வருடத்திற்கு முதல் கட்ட நிதியாக ஒவ்வொரு ஆலயத்திற்கும் தலா 15 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மேற்குறித்த இரண்டு மரபுரிமை சின்னங்களும் பழைய வடிவில் அனைத்து அம்சங்களுடன் மீளுருவாக்கம் செய்யப்படவுள்ளது.
அடுத்தடுத்த வருடங்களில் தேவையான மேலதிக நிதியும் ஒதுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாக பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு சின்னங்களும் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கை தொல்லியல் திணைக்களத்தினரால் பாதுகாக்கப்பட வேண்டிய மரபுரிமைச் சின்னங்கள் என அடையாளப்படுத்தியது.
இதன் பின்னர் இந்து சமய திணைக்களம் கொட்டகை அமைத்து எஞ்சிய பகுதிகள் அழிந்து போகாமல பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இலங்கை சுந்திரம் அடைந்த காலம் முதல் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் அழிவடைந்தும், விற்பனை பொருளாகவும் மாறியிருந்த நிலையில் இந்த முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது.
1990 ஆம் ஆண்டு முதல் இவ்விரு ஆலயங்களும் அனைவருக்கும் பரிச்சியமாக இருந்து வந்துள்ளன.
இதுவொரு நல்ல முயற்சி இந்த முயற்சியில் தொல்லியல் பட்டத்தாரிகள் 16 பேர் ஈடுப்படவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி........
மண்ணித்தலை சிவன் ஆலயத்தை பாதுகாப்பதற்குரிய பணிகள் ஆரம்பம்









பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
