மண்ணித்தலை சிவன் ஆலயத்தை பாதுகாப்பதற்குரிய பணிகள் ஆரம்பம்
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவும் (Vithura Wickremanayake), யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனும் (Angajan Ramanathan) பூநகரி, கௌதாரிமுனை பகுதிக்கான விஜயமொன்றை நேற்று மேற்கொண்டுள்ளனர்.
இவ்விஜயத்தின்போது, 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்காலத்தைச் சேர்ந்த, மண்ணித்தலை சிவன் ஆலயத்தை பாதுகாப்பதற்குரிய பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான அகழாய்வு உள்ளிட்ட பணிகளை செயற்படுத்தல், தமிழர் வரலாற்றுச்சின்னங்களைப் பாதுகாக்கும், பராமரிக்கும் செயற்பாடுகளைத் திட்டமிடல், அருங்காட்சியகங்களிலுள்ள கலைப்பொருட்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், வரலாற்றுச் சின்னங்களை நகலெடுத்தல் அச்சிடுதல் நூலாக்குதல் போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதனூடாக தமிழர் கலாச்சார வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளை, அங்கஜன் இராமநாதன் முன்வைத்துள்ளார்.
இதன்போது விசேட வழிபாடு இடம்பெற்றதுடன், ஆலயத்தின் மரபினை பாதுகாக்கும் வகையிலான வேலைகளை ஆரம்பிப்பதற்கான பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
குறித்த சிவாலயமானது 11ம் நூற்றாண்டு காலத்துக்குரியது எனவும், சோழர் காலத்து சிவ வழிபாட்டுக்கு உரியதாகவும் தொல்பியல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் குறித்த ஆலயத்தில் நீண்ட காலமாக முறையான வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டிருக்வில்லை எனவும், தொல்பியல் அடையாளங்கள் காணப்படும் நிலையில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த தொல்பொருள் அடையாளங்களை மேலும் அழிவடையாத வகையில் பாதுகாக்கும் நோக்குடன் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்றயதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்களான நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர், யாழ்ப்பாணம் பழைய கச்சேரி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கந்த சுவாமி ஆலயம், அல்லைப்பிட்டி, கந்தரோடை போன்ற பிரதேசங்களிற்கு தொல்லியல்துறை அமைச்சர் விதுல விக்கிரமரத்ன கள விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் யாழ். பல்கலைக்கழக சமூகத்துடனும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேஷனையும் (K.Mageshan) இன்று சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம்
இவ்விஜயத்தின் போது, கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயத்தை பாதுகாப்பதற்கான புனரமைப்பு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இவ்வாலயமானது நாயக்கர் கால கட்டிட வடிவத்தை பிரதிபலிப்பதுடன், செண்பகப்பெருமாள் காலத்து ஆலயமாக இதை கருதமுடியும் எனவும், இவ்வாலயத்தை பாதுகாத்து ஆய்வுகளை மேற்கொள்ளும்போது மேலும் பல வரலாற்று தகவல்களை பெறமுடியும் எனவும் வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
