யூத ஆலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்:உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்
இங்கிலாந்திலுள்ள கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள யூத தேவாலயம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது உயிரிழந்தவர்களில் ஒருவர் பொலிஸாரால் சுடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று காலை, கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள யூத ஆலயம் ஒன்றின் முன் நின்றவர்கள் மீது தாக்குதல்தாரி கத்தியால் குத்தியுள்ளார்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தாக்குதல்தாரி ஆலயத்துக்குள் நுழையாமல் தடுப்பதற்காக அவரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதல்
இதன்போது, பொலிஸாரின் தாக்குதலில் 35 வயதுடைய ஜிஹாத் அல்-ஷமி என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும், பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவருக்கும் துப்பாக்கிக்குண்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
அவரும் பொலிசார் சுடும்போது தாக்கப்பட்டிருக்கலாம் என கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



