அரசியல் கைதிகள் குறித்து சஜித் தரப்பு வெளியிட்டுள்ள தகவல்
அரசியல் கைதிகளை தேசிய மக்கள் சக்தி அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) எம்.பி ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது, "சிறைச்சாலைகளில் தற்போது குறைந்தளவு அரசியல் கைதிகளே உள்ளனர் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டம்
எனவே, அவர்களை இந்த அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு எமது கட்சியின் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும், அரசியல் கைதிகளை மிக விரைவில் விடுதலை செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri