ஒமிக்ரோன் வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி வெளியிட்டுள்ள தகவல்
உலகளாவிய ரீதியில் தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸ் வகை குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் மாநாடு ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் தீவிரமான வகையாக மாறுமா என்று கணிக்க இயலாது. மிகவும் பரவக்கூடியதாக உள்ளது. தென் ஆப்ரிக்காவில் தினசரி பாதிப்பு இரட்டிப்பாகின்றது. நாம் தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் பீதி அடையாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகளவில் 99 சதவீத நோய்த்தொற்றுக்கு டெல்டா வகை காரணம். இந்த உருமாறிய வைரசும் அதிகம் பரவக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனாலும் தற்போது கணிக்க முடியாது. நாம் காத்திருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam