வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2026 செப்டெம்பர் மாதத்தில் நாட்டில் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்ட தொகை 34% குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட செப்டெம்பர் மாதத்திற்கான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் வர்த்தக வாகன இறக்குமதி
செப்டெம்பர் மாதத்தில் தனியார் மற்றும் வர்த்தக வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்ட தொகை 188 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இது ஆகஸ்ட் மாதத்தில் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்ட 189 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நெருக்கமாக உள்ளது.

மேலும், மத்திய வங்கியின் தரவுகளின்படி, ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான ஒன்பது மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 1,871 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இருப்பினும், வாகன இறக்குமதி செலவினம் குறைந்திருந்த போதிலும், ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் வாகன பதிவுகள் 18% அதிகரித்துள்ளன.
அதிகரிப்பிற்கான முக்கிய காரணம்
அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 45,811 வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், செப்டெம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 54,214 ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணம், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வாகனப் பதிவுகளின் அதிகரிப்பு ஆகும். செப்டெம்பர் மாதத்தில் மோட்டார் சைக்கிள் பதிவுகள் 38,747 ஆக அதிகரித்துள்ளன.
அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெறும் முரசு! வானிலை மாற்றம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan