எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் (PHOTO)
லங்கா ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
False News update -
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 7, 2022
Msgs circulating on a price increase in IOC fuel is completely false. No price increase in IOC or Ceypetco. Will take legal action against those who have posted and shared fake and false news to mislead the public.
இதேவேளை, ஐஓசி அல்லது சிபெட்கோ எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களில் எரிபொருட்கள் முடிந்து விடும்:உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்:சர்வதேச ஊடகம் |
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் தவறான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.