அவசரக்கால பொதுச்சேவை பகுதிகளுக்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,வைத்தியசாலைகள் போன்ற அத்தியாவசிய மற்றும் அவசரக்கால பொதுச் சேவை பகுதிகளுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் குழு உறுப்பினர் எரங்க குடாஹேவா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேர அட்டவணை தொடர்பில் அறிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகப் பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 4 கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு! - விசேட அறிவிப்பு வெளியானது
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri