பிரதமரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்ட ருவான் விஜயவர்தன
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதமரின் எரிந்த வீட்டிற்கு வருகை தந்து ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தீ வைக்கப்பட்டமைக்கான காரணம்
பிரதமரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டமைக்கு போராட்டத்தை காரணம் காட்ட முடியாது. இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு ஒரு அரசியல் நோக்கம் உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பம் முதலே அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் கட்சி. இதன் காரணமாக பிரதமரின் வீட்டை எரிக்க ஆட்களை கொண்டு வருமாறு ஒரு அரசியல் கட்சி பகிரங்கமாக கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களின் போராட்டத்தை நினைக்கும் போது பெருமிதம் கொள்வதாகவும், ஆனால் தனிப்பட்ட வீடுகளுக்கு இவ்வாறு தீ வைப்பதினை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri