வீடு தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் ரணில் வெளியிட்ட பரபரப்புத் தகவல் (Video)
கொள்ளுப்பிட்டியிலுள்ள தனது தனிப்பட்ட வீட்டுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ரணில் கருத்து வெளியிட்டார்.
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது குறித்து தான் எந்த விதத்திலும் கவலை கொள்ளவில்லை. ஆனால் தாம் படித்த புத்தகங்களை தீக்கு இரையாக்கியது எண்ணிதான் கவலைக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மூன்று தலைமுறைகளாக சேர்க்கப்பட்ட புத்தகங்கள்
மூன்று தலைமுறைகளாக சேர்த்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை மூன்று அறைகளில் சேமித்து வைத்திருந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிறியளவிலான புத்தகங்கள் மீட்கப்பட்ட போதும், பெருமளவான புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான நடவடிக்கையின் கடைசி கட்டத்தில்தான் அரசியல் பழிவாங்கல் நிகழ்வாக தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை
இந்த சம்பவம் குறித்து குற்ற புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த வீடு ரோயல் கல்லூரிக்கு தனமாக உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
பிரமரின் வீட்டில் மீக்கப்பட்ட புத்தகங்கள் கோட்டா கோகம போராட்டக்களத்திலுள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
