மகிந்தவை சூழ்ந்துள்ளவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
பிரதமர் மகிந்த ராஜபக்சவை பல வர்த்தகர்கள் சுற்றிவளைத்து கொண்டுள்ளதாகவும் அனைத்தும் பணத்திற்காக நடப்பதாகவும் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பதிகாரி ஷிராம் யூனூஸ் தெரிவித்துள்ளார்.
இணையத்தள வலையெளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். இனிவரும் காலத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் எதுவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்காது. இதுவரை கிடைத்த முஸ்லிம்களின் 98 வீத வாக்குகள் மீண்டும் கிடைக்காது.
தற்போதைய அரசாங்கம் கவிழும் வரை முஸ்லிம் மக்கள் காத்திருக்கின்றனர். 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பின்னர் பிரதமர் மகிந்த ராஜக்ச ஒதுக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் என இரண்டு அணிகள் பிரிந்துள்ளன. பிரதமர் பதவி என்பது தற்போது பெயரளவிலான பதவியாக மாத்திரமே இருக்கின்றது எனவும் ஷிராம் யூனூஸ் குறிப்பிட்டுள்ளார்.