எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடாத்துவது குறித்து சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அனைத்து பாடசாலைகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரு குழுக்களாக பிரித்து பாடசாலைகளை நடாத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,காதார சேவைகள் பணிப்பாளரினால் பாடசாலை மாணவர்களுக்கான விஷேட சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கோவிட் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அல்லது கோவிட் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கும் ஒருவர் இனங்காணப்படும் சந்தர்ப்பத்தில் நடந்து கொள்ள வேண்டிய விதம் தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.