ஈஸ்டர் தாக்குதலின் சர்ச்சைக்குரிய நபர் "சோனிக் சோனிக்" பற்றிய தகவல் கசிவு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக இதுவரை வெளியாகாத சர்ச்சைக்குரிய பாத்திரம் எனக் கருதப்படும் “சோனிக் சோனிக்” சம்பந்தமாக முதல் முறையாக விடயங்களை நீதிமன்றத்திற்கு முன்வைத்து, குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சோனிக் சோனிக் என அழைக்கப்படும் நபர் பயன்படுத்திய சிம் அட்டை தொடர்பில் விசாரணைகளை நடத்தும் போது, அது கொழும்பு நகர போக்குவரத்து பொலிஸ் பிரிவின்பெண் அதிகாரி ஒருவரின் பெயருக்கு வாங்கப்பட்டது என தெரியவந்துள்ளதாக ஷானி அபேசேகர தனது மனுவில் கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, அந்த சிம் அட்டையை அரச புலனாய்வு சேவையில் கடமையாற்றும் உப பொலிஸ் ஆய்வாளருக்கு வழங்கி இருந்ததை கண்டறிந்ததாக ஷானி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் உப பொலிஸ் ஆய்வாளரிடம் விசாரணை நடத்த முயற்சித்த போது, அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாலம் என சுட்டிக்காட்டி, விசாரணை நடத்தப்படுவதை அரச புலனாய்வு சேவையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தடுத்தார் எனவும் ஷானி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக தான் முறையான விசாரணைகளை நடத்தவில்லை என கூறி மீண்டும் கைது செய்யும் முயற்சிகள் காணப்படுவதாகவும் ஷானி தனது மனுவில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை கொழும்பு டெலிகிராப் இணையத்தளம் வெளியிட்டிருந்ததுடன் பின்னர் அதனை மேற்கோள்காட்டி லங்காசர இணையத்தளமும் தகவலை பிரசுரித்திருந்தது.
எது எப்படி இருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் அடிக்கடி நாடாளுமன்றத்தில் தமது சிறப்புரிமையை பயன்படுத்தி, இந்த சோனிக் சோனிக் என்ற நபர் பற்றிய தகவல்களை வெளியிட்டு வந்தனர்.
சோனிக் சோனிக் என்ற இந்த நபரின் பெயர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகளின் போது குறிப்பிடப்பட்டதாக அவர்கள் கூறியிருந்தனர்.
எனினும் ஹரின் மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர். தமது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி பொய்களை கூறுவதாகவும் முடிந்தால், அவற்றை வெளியில் சென்று கூறுமாறு ஆளும் கட்சியினர் கூறி வந்தனர்.
இவ்வாறான நிலைமையில், குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நீதிமன்றத்திற்கு இந்த தகவலை வழங்கி இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam