பாடசாலைகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
பாடசாலைகளுக்கு அருகில் இன்று முதல் விசேட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுவதற்கான அவசியமில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கடந்த 21, 22 ஆகிய இரண்டு நாட்களும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
அழுத்தங்களை மீறி பாடசாலைக்கு வந்த ஆசிரியர்களின் கோரிக்கைக்கமைய இந்த இரண்டு நாட்களும் பாடசாலைக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனினும் இதன் பின்னர் அவ்வாறான பாதுகாப்பு அவசியமில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடமைக்கு வராத ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தும் நபர்களுக்கு பொலிஸாரினால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri