ஜனாதிபதியின் விஜயம் குறித்து இந்திய தரப்பு வெளியிட்ட தகவல்கள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஜனாதிபதி அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு விஜயம் இதுவாகும் என இந்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அநுரகுமார திசாநாயக்க, தனது விஜயத்தின் போது, இருதரப்பு சந்திப்புகள் இந்திய குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு பிரச்சினை
இதனையடுத்து பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவார் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீடு மற்றும் வணிக தொடர்புகளை மேம்படுத்துவதற்காக புதுடில்லியில் நடைபெறும் வணிக நிகழ்விலும் ஜனாதிபதி திசாநாயக்க பங்கேற்பார் என கூறப்படுகிறது.
மேலும், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக அவர் புத்த கயாவுக்கும் செல்வுள்ளார்.
இந்தநிலையில், ஜனாதிபதி திசாநாயக்காவின் இந்திய வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
