தகவல் அறியும் உரிமை ஆணையம் பொலிஸ் திணைக்களத்துக்கு பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கையில் நடைப்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகைக்குண்டு கொள்முதல் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு பொலிஸ் திணைக்களத்துக்கு தகவல் அறியும் உரிமை ஆணையம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரை இந்த கொள்முதல் இடம்பெற்றுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
இலங்கைக்கு எவ்வளவு கண்ணீர்ப்புகை இறக்குமதி செய்யப்பட்டது மற்றும் எத்தனை தடவைகள் எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டது என்பதை அறிய தருமாறு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூகம் மற்றும் மதத்திற்கான மையம் கடந்த மே மாதம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் பொலிஸ் திணைக்களம் அதனை நிராகரித்திருந்தது.
சட்ட அமுலாக்கம் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களின் ரகசியத்தை அம்பலப்படுத்தும் என்பதன் காரணமாகவே இந்த தகவல்களை வெளியிட முடியாது என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சமூகம் மற்றும் மதத்திற்கான மையம் தாக்கல் செய்த மேன்முறையீட்டின் கீழ், 2022 ஜூலை 18 ஆம் திகதியன்று தகவல் அறியும் உரிமை ஆணையம் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது.
அதில் பொலிஸ் திணைக்களத்தின் காரணம் பொருந்தாது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
அறிவுறுத்தல்
கோரப்பட்ட காலத்திற்குள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணீர் புகையின் அளவு, அதற்கான குறிப்பிட்ட காலங்கள் மற்றும் அதற்கான நிதி செலவுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் அதன் இடைக்கால உத்தரவு கிடைத்தவுடன் உடனடியாக வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேல்முறையீட்டின் மேலதிக விசாரணை எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம், தமது பார்வைக்காக கண்ணீர் புகை குண்டு, கேள்வி பத்திரங்கள் மற்றும் கொள்முதல் செயல்முறை தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் திணைக்களத்துக்கு தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தை முன்னெடுக்க புலம்பெயர்ந்தோர் உதவினர்: நடிகை தமிதா அபேரத்ன |





குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
