3 நாடுகளிலுள்ள இலங்கை அரசுக்கு சொந்தமான தூதரக கட்டிடங்கள் குறித்து வெளியான தகவல்
3 நாடுகளில் தூதரகங்களாக செயற்பட்டு வரும் இலங்கை அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தப்படவில்லை என கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலியா, சுவீடன், கென்யா ஆகிய நாடுகளிலேயே இவ்வாறு பயன்படுத்தப்படவில்லை என குறித்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு தூதரகங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதில் ஒவ்வொரு நாடும் பயன்படுத்தும் முறையான அளவுகோல்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச கணக்குக் குழு உத்தரவிட்டிருந்தது.
அரச கணக்குக் குழு உத்தரவு
இருப்பினும், 2021ஆம் ஆண்டு வரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் இந்த தகவல் வெளிவிவகார அமைச்சின் 2021 ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கணக்காய்வாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
