‘‘தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செல்வாக்கை குறைத்த காலம்’’பா.அரியநேத்திரன்
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு செல்வாக்கை குறைத்த சாபக்கேடான காலம் நல்லாட்சி அரசு ஆட்சி அமைந்த கடந்த 2015 தொடக்கம் 2020, வரையுமான ஐந்து வருடங்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் (P.Ariyanethran) தெரிவித்துள்ளார்.
கடந்த 2020, பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து பத்து தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தெரிவானார்கள், அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவானார்கள்.
இதற்கு என்ன காரணம் என ஊடகவியலாளர் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்தேசிய கூட்டமைப்பு 2001ல் உருவாக்கப்பட்டு 2001 டிசம்பர் 08ல் இடம்பெற்ற தேர்தலில் 18, நாடாளுமன்ற உறுப்பினர்களும், 2004 ஏப்ரல் 02ல் இடம்பெற்ற தேர்தலில் 22, நாடாளுமன்ற உறுப்பினர்களும், 2010 ஏப்ரல் 08ல் இடம்பெற்ற தேர்தலில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 2015 ஆகஸ்ட்17ல் இடம்பெற்ற தேர்தலில் 16, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் இறுதியாக 2020, ஆகஸ்ட் 05ல் இடம்பெற்ற தேர்தலில் மிக குறைந்த 10, ஆசனங்கள் மட்டுமே பெற முடிந்தது.இதற்கு பல வேறு வேறு காரணங்களை பலர் கூறினாலும் உண்மையில் பிரதான காரணம் ஆளும் தரப்புடன் இணக்கப்பாட்டு அரசியலே எமது செல்வாக்கை குறைத்தது.
2015 பொதுத்தேர்தலுக்கு பின்னர் நல்லாட்சி அரசில் தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சி தலைவர் பதவி எடுத்தாலும் எதிர்கட்சியாக செயல்படவில்லை.
வடக்கு,கிழக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பெறும் நோக்கில் ஆட்சியாளருடன் இணக்கப்பாடான ஆட்சியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு செயல்பட்டதால் அதை மக்கள் ஆளும் கட்சியுடன் இணைந்த ஆளும் தரப்பாகவே எம்மை பார்த்தனர்.
இதன் தாக்கம் தேசிய அரசில் மட்டும் நின்றுவிடவில்லை கிழக்கு மாகாணசபையிலும் நான்கு கட்சிகளுடன் இணைந்து இணக்கப்பாடான ஆட்சியில் 2015 தொடக்கம் 2017 வரை இரண்டு வருடங்கள் செயல்பட்டதால் சில அபிவிருத்திகள் செய்யமுடிந்தது.
ஆனால் நான்கு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தமையை மறைத்து எமக்கு எதிரானவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் ஹாங்கிரசுடன் மட்டும் ஏழு உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாணசபையை பதினொரு உறுப்பினரை கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டனர் என தவறான பரப்புரையை செய்தனர்.
இது தவறான கருத்து கிழக்கு மாகாணசபை மொத்தம் 37 உறுப்பினர்கள், 2015ல் ஐ.ம.சு.கூட்டமைப்பு 14 உறுப்பினர்கள், த.தே.கூ 11 உறுப்பினர்கள், மு.கா. 07 உறுப்பினர்கள், ஐ.தே.கட்சி 04 உறுப்பினர்கள், இந்த 36 உறுப்பினர்களுடன் தான் 2015ல் கிழக்கு மாகாணசபை ஆட்சி நடை பெற்றது.
ஜே.வி.பி 01 உறுப்பினர் ஆட்சியில் பங்கேற்கவில்லை, இதில் இனரீதியாக முஸ்லிம் உறுப்பினர்கள் 15 பேர், தமிழ் உறுப்பினர்கள் 12 பேர், சிங்கள உறுப்பினர்கள் 09 பேர்.இதை புரிந்து கொள்ளாமல் சிலரும், புரிந்து கொண்டு எம்மீது சேறு பூசுவதற்காக பலரும் பிரசாரம் செய்தனர்.
போதாக்குறைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் (Rauff Hakeem), காத்தான்குடியில் முஸ்லிம் மக்களை திருப்த்திப்படுத்த தமது ஆதரவை கூட்ட வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இராஜதந்திரத்தின் செயல்பாட்டால் தமிழ்தேசிய கூட்டமைப்பில் 11, உறுப்பினர்கள் இருந்தபோதும் 7 உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் தலைமையாகிய நாம் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டோம்.
இதுதான் முஸ்லிம் காங்கிரசின் இராஜதந்திரம் தமிழ்தேசிய கூட்டமைப்பை எப்படி வளைத்து எடுத்தோம் என அப்பட்டமான பொய்யை கூறினார்.இதை எமக்கு எதிரான சில கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் கடந்த தேர்தலில் பிரசாரமாக பாவித்து எமது ஆதரவை குறைத்தனர்.
தேசிய அரசில் நல்லாட்சியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இணக்கப்பாடான சில அரசியல் நகர்வுகளை அரசியல் யாப்பு திருத்தம், அரசியல் தீர்வை முன்னிறுத்தி செயல்பட்டாலும் சில அபிவிருத்திகள், நினைவேந்தல்கள், சில அரசியல் கைதிகளின் விடுதலை செய்யப்பட்டாலும் பூரணமான எதிர்பார்த்த விடயங்களை நல்லாட்சி அரசு செய்யாமல் ஏமாற்றியது உண்மை.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்துவதற்கான பல சந்தர்பம் இருந்தும் அதை ஏமாற்றியவர்கள் பிரதமர் ரணிலும் (Ranil), ஜனாதிபதி மைத்திரியும் (Maithripala Sirisena) என்பது வெளிப்படையான உண்மை.
கடந்த 2015 தொடக்கம் 2020 வரை ஆளும் தரப்புடன் சில விடயங்களுக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு பல விட்டுக்கொடுப்புகளை செய்து நல்லாட்சியிலும், கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சியில் இருந்தமையால் கடந்த 2001 தொடக்கம் 2015 வரை எதிர்கட்சியில் இருந்து நாம் செய்த அரசியல் பணிக்கு கிடைத்த தமிழ் மக்களின் அங்கீகாரம் 2020 தேர்தலில் கிடைக்கவில்லை என்ற கசப்பான உண்மையை அனைவரும் புரிதல் வேண்டும்.
அதாவது முழுமையான எதிர்கட்சியாக இருந்து பெற்ற ஆதரவு ஆளும் தரப்புடன் கைகோர்க்கும் போது இல்லாமல் போனது என்பதே வரலாற்றுப்பதிவாகும் என தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri