இலங்கையில் கடந்த மாதம் 5.7 வீதம் வரை சரிவை சந்தித்துள்ள பணவீக்கம்
கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையின் பணவீக்கம் 5.7 வீதம் வரை குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 6.0 வீதமக காணப்பட்ட பணவீக்கம், செப்டெம்பர் மாதம் 5.7 வீதமாக குறைந்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் குறியீட்டின் வருடாந்த புள்ளி மாற்றத்தால், அளவிடப்பட்டமைக்கு அமைய பண வீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டெம்பரில் காணப்பட்ட உயர் மதிப்பீட்டு புள்ளிவிபர தாக்கமே இதற்கு காரணம் என இலங்கை மத்தியவங்கி குறிப்பிட்டுள்ளது.
ஆகஸ்ட்டில் 11.5 வீதமாக காணப்பட்ட உணவு வகை சம்பந்தமான பணவீக்கம் செப்டம்பரில் 10.0 வீதமாக குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களுக்கு அமைய உணவு அல்லாத பிரிவின் வருடாந்த புள்ளிவிபரங்களுக்கு அமைய கடந்த ஆகஸ்ட் மாதம் 3.5 வீதமாக காணப்பட்ட பணவீக்கம், செப்டெம்பர் மாதம் 3.8 வீதமாக அதிகரித்துள்ளது.
வருடாந்தம் சாதாரண அடிப்படையில் அளவிடப்படும் கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெணின் மாற்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 4.3 வீதமாக காணப்பட்டதுடன், செப்டெம்பர் மாதம் 4.5 வீதமாக அதிகரித்துள்ளது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 19 மணி நேரம் முன்

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam
