யாழ்ப்பாணத்தில் வைத்தியர்களின் பொறுப்பற்ற செயலால் உயிரிழந்த குழந்தை
யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜாவினால், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்கான கோரிக்கை நேற்றைய தினம் (12.04.2023) விடுக்கப்பட்டுள்ளது.
புலோலி வடக்கு, கூவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். குறித்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் (11.04.2023) குழந்தை பிறந்த போதிலும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் மரண விசாரணை அதிகாரி
சம்பவம் தொடர்பில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விடுத்த பணிப்புரைக்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரி பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
பிரசவ ஊசி செலுத்தப்பட்டதன் பின்னர் தாய் உரிய முறையில் கவனிக்கப்படாமையால், கருப்பை வெடித்து, சிசுவுக்குக் குருதி கடத்தப்படுவது தடைப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவைப்
பிறப்பிக்குமாறு கோரி, பருத்தித்துறை பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam
