கஞ்சுருஹான் விளையாட்டு மைதானத்தை தகர்க்க இந்தோனேசியா தீர்மானம்
அண்மையில் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 131 கால்பந்து ரசிகர்கள் உயிரிழந்தும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில் கால்பந்தாட்ட மைதானத்தை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது.
இதன்படி மலாங்கில் உள்ள கஞ்சுருஹான் மைதானம், சர்வதேச கால் பந்தாட்ட விளையாட்டு நிர்வாகக் குழுவான ஃபிஃபா நிர்ணயித்த பாதுகாப்புத் தரங்களின் படி மீண்டும் கட்டப்படும் என அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.
ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவை நேற்று (18.10.2022) சந்தித்த பின்னர் விடோடோ இதனை அறிவித்துள்ளார்.
உலகக் கிண்ணப்போட்டி
இந்தோனேசியா 2023 ஆம் ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப்போட்டிகளை நடத்தவுள்ள நிலையில், நிகழ்வுக்கு முன்னதாக ஒரு கூட்டு பணிக்குழுவை உருவாக்க இருவரும் இணக்கம் வெளியிட்டனர்.
இம்மாதம் 1ஆம் திகதியன்று, போட்டி ஒன்றின் பின்னர் மைதானத்தை விட்டு வெளியேற முயன்றபோது நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இறந்துள்ளனர்.
உலகின் மிக மோசமான, கால்பந்தாட்ட பேரழிவுகளில் ஒன்றான இந்த சம்பவத்தில் பொலிஸார் மற்றும் அமைப்பாளர்கள் உட்பட ஆறு பேர் மீது குற்றவியல் அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கண்ணீர் புகை குண்டு தாக்குதல்
கடந்த வாரம் வெளியிடப்பட்ட விசாரணையின் முடிவில், கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் இந்த சோகமான சம்பவம் இடம்பெற்றதாக என தெரிவிக்கப்படுகின்றது.
மைதான திறனுக்கு அப்பால் ரசிகர்கள் இருந்தமை மற்றும் வெளியேறும் கதவுகள் பூட்டப்பட்டமை என்பனவும் இறப்புக்களுக்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதேவேளை இந்த சம்பவம் காரணமாக 23 ஆம் ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியை இந்தோனேசியாவில் இருந்து நீக்க முடியாது சர்வதேச கால்பந்து சம்மேளனம் உறுதியளித்துள்ளது.
எனினும் அண்மைய இறப்பு சம்பவம் இடம்பெற்ற கஞ்சுருஹான் மைதானத்தில் போட்டிகள் எதுவும் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 24 நாடுகளின் அணிகள், ஆறு இந்தோனேசிய நகரங்களில் நடைபெறும் இடங்களில்
போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
