பிரதமராக பதவியேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்திய - இலங்கை ஆசீர்வாத பூஜை
பிரதமர் பதவியேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டும் கோவிட் தொற்று நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆசீர்வாதம் வேண்டியும் இன்று (09) இந்தியாவிலுள்ள சாரநாத் மூலகண்டி குடி விகாரையில் இடம்பெற்ற 'இலங்கை - இந்திய ஆசீர்வாத பூஜை' நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையிலிருந்து ஸும் தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டுள்ளார்.
இந்திய மஹா போதி சங்கத்தின் தலைமையில் இந்திய - இலங்கை நட்புறவு சங்கம் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த விஷ்வ ஆசீர்வாத பூஜையை ஏற்பாடு செய்திருந்தன.
இந்திய மஹா போதி சங்கத்தின் பொதுச் செயலாளர் பெலவத்த சீவலி தேரரின் அறிவுரை அனுசாசனத்திற்கமைய இடம்பெற்ற இந்த விசேட இலங்கை - இந்திய ஆசீர்வாத பூஜை நிகழ்வில் இந்திய மஹா போதி சங்கத்தைச் சேர்ந்த அனைத்து விகாரைகளும் இணைந்து கொண்டன.
அதற்கமைய இந்திய மஹா போதி சங்கத்தின் சாரநாத், லும்பினி, கொல்கத்தா, லக்னவ் மற்றும் புத்தகயா விகாரைகளிலிருந்து மஹா சங்கத்தினர் இந்த ஆசீர்வாத பூஜையில் பங்குபற்றினர்.
குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட இரு நாடுகளினதும் உயர் ஸ்தானிகராலாய பிரதானிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
