அம்பாறையில் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது
அம்பாறை- நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் மீது இந்தத் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று (11) மாலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 15 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சான்றுப்பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.