விரைவில் இலங்கை திரும்புவார் கோட்டாபய: இந்திக்க அநுருத்த
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.
'இலங்கையில் இருந்து மாலைதீவு சென்ற கோட்டாபய ராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். தற்போது தாய்லாந்து சென்றுள்ளார்.
எதற்காக இவ்வாறு சுற்றித் திரிகின்றார். அவருக்கு இலங்கை வருவதற்கு உகந்த சூழ்நிலை இல்லையா' என்று ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச நிச்சயம் நாடு திரும்புவார்
"அவ்வாறு எந்தத் தடையும் இல்லை. அவர் விரும்பிய நேரத்தில் நாடு திரும்பலாம். அவருக்கென சில பணிகள் இருக்கலாம். அந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிச்சயம் நாடு திரும்புவார்.
மேலும் ”இலங்கைதான் அவரின் நாடு" என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் அழைப்புக்கு உறுதியான பதில் வழங்காத கோட்டாபய! |
நாமலுக்கு புதிய பதவி! கோட்டாபயவும் பசிலும் பதவி வேண்டாம் என்று அறிவிப்பு |





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
