இலங்கை மீது இந்தியாவின் இராஜதந்திர ஊடுருவல்(video)
தமிழ் மக்களுக்கான உதவிகள் என்ற போர்வையில் இந்தியா தனது ஊடுருவல்களை இலங்கைமீது செலுத்தி வருவதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தினுடைய ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கையை பொறுத்தமட்டில் அமெரிக்க, சீனா மற்றும் இந்தியாவின் நடவடிக்கைகள் என்பது ஒரு ஊடுருவளாகவே காணப்படும்.
அந்தவகையில் இந்தியா, தற்போது தமிழ் மக்களுக்கான உதவிகள் என்ற போர்வையில் இலங்கை மீது தனது காய்களை நகர்த்தி வருகிறது.
மேலும் இலங்கை மீது தனது பிரசன்னத்தை நிலைநாட்டிக்கொள்ள இந்தியா பல்வேறு இராஜதந்திர முறைகளை கையாளுகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஒன்று தான் இலங்கை - இந்திய பால விவகாரம்.
தமிழ் மக்களுக்கான தீர்வை ஒருபோதும் பெற்றுத்தராது இந்தியா வழங்கும் உதவிகள் என்பது ஒரு ஊடுருவலாகவே காணப்படும்.
மேலும், அதிகாரம் ஊடாகவும் ஆயுதம் ஊடாகவும் தனது நகர்வுகளை இலங்கை மீது செலுத்த இந்தியாவின் raw புலனாய்வு பிரிவு செயற்படுகிறது." என தெரிவித்துள்ளார்.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
