யாழில் இருந்து பறக்கும் விமானங்களால் அச்சத்தில் இந்திய புலனாய்வு (Video)
இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவிற்கான ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்திய புலனாய்வுத்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழில் இருந்து இந்திய செல்லும் விமானங்கள் தொடர்பில் அவர்கள் பாரிய அச்சத்தை கொண்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
லங்காசிறி ஊடகத்தினுடைய ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், உலகின் பல புலம்பெயர் தேசங்களில் பாரிய படைக்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கான பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியான விடயமாகவே தொடர்கிறது.
ஆனால் இந்தியாவை பொறுத்தமட்டில் அதற்கான பயிற்சிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் யாழ் விமான நிலையம் ஊடாக இந்தியாவிற்கு வரும் பயணிகளில் சீன உளவாளிகளும் காணப்படலாம் என்ற அச்சம் தற்போது இந்தியாவிற்கு எழுந்துள்ளது." என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இன்னும் பல முக்கிய விடயங்கைள உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,