இந்திய படைகள் தரையிறங்குவது ரணிலின் முடிவில்(Video)
ரணில் உட்பட சிங்கள தலைமைகள் எடுக்கும் முடிவுகள் தான் இந்திய படை இறக்கத்தையோ அல்லது இந்தியா இலங்கை மீது செல்வாக்கு செலுத்துவதையோ தீர்மானிக்கும் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“சீனா, இந்து சமுத்திரத்தில் எவ்வாறு வேகமாக வளர்ச்சி அடைகிறதோ அந்தளவிற்கு வேகமாக இந்தியாவினுடைய ஆளுகை இலங்கைக்குள் வரும்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைத்தாலும் 12 மணித்தியாலங்களில் இலங்கை தீவை இந்திய படையால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். ரணிலால் அமைக்கப்படாத பாலத்தாலும் எந்தநேரத்திலும் படை இறக்கம் நடக்கலாம்.
இன்று காணப்படும் அரசியல் சூழலில் இது சிறிய விடயம். ஆனாலும் தடைகள் இருக்கும். ஐ.நா வரை இந்த பிரச்சினைகள் போகலாம். இருப்பினும் ரஷ்யா ஐ.நாவை கையாண்டது போன்று இந்தியாவும் கையாளும்.”என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam