பிரான்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்கும் இந்திய பெண்
உலகின் புகழ்பெற்ற மற்றும் போற்றப்படும் நிறுவனமான பேஷன் சேனலின் குளோபல் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பெண் லீனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெம்ஷத்பூரில் உள்ள எக்ஸ்.எல்.ஆர்.ஐ கல்வி நிறுவனத்தில் தனது படிப்பை முடித்த இவர் 1992-ம் ஆண்டில் ஆங்கிலோ-டச்சு எஃப்எம்சிஜி நிறுவனமான யுனிலீவர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
அந்நிறுவனத்தின் முதல் பெண் மற்றும் இளைய தலைமை மனித வள அதிகாரியாக பொறுப்பேற்று கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், வரும் ஜனவரி முதல் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரெஞ்சு சொகுசு பேஷன் ஹவுஸ் சேனலின் உலகளாவிய தலைமை நிர்வாகியாகவும் அவர் பொறுப்பு ஏற்கவுள்ளார்.
"உலகின் புகழ்பெற்ற மற்றும் போற்றப்படும் நிறுவனமான பேஷன் சேனலின் குளோபல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதில் பணிவும்,பெருமையும் அடைகிறேன்" என்று லீனா நாயர் தெரிவித்துள்ளார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan