சீனாவின் உளவுக்கப்பலுக்கு சவால் விடும் இந்தியா யுத்த கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Delhi எனும் யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.
குறித்த யுத்த கப்பல் இன்று (01.09.2023) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
கடற்படை கப்பலுடன் பயிற்சி
இந்த கப்பல் 163 மீட்டர் நீளமுடையது என்றும் கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், INS Delhi கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும் இதன்போது, மேற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam