நுவரெலியாவில் இந்திய துணை ஜனாதிபதி - வீட்டு திட்டங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி திரு. சி.பி. ராதாகிருஷ்ணன், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று (20.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு
நுவரெலியா நோக்கி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட துணை ஜனாதிபதி மற்றும் பிரதி அமைச்சர் இந்திய அரசின் நன்கொடையுடன் ராகலை லிடெஸ்டேல் சூரியகாந்தி தோட்டப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டு திட்டங்களையும் பார்வையிட்டுள்ளார்.

அத்துடன், தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய அவர், இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கான நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan