யாழ்.கட்டைக்காட்டில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம்
யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
இதை சாதகமாக பயன்படுத்திய இந்திய இழுவை மடி கடற்றொழிலாளர்கள் கட்டைக்காட்டு கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீட்டர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து இழுவை மடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடற்றொழிலாளர்கள் கவலை
இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான கடல் வளத்தை சட்டவிரோத முறையில் கண் ஊடாக அழித்துச் செல்கிறார்கள்.

வெற்றிலைக்கேணி பகுதியில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளம் அமைந்திருக்கின்ற போதிலும் கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்திய இழுவைமடி படகுகள் எந்தவித பயமுமின்றி தொழில் செய்து வருகிறார்கள்.
வடமராட்சி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்திய இழுவை மடி கடற்றொழிலாளர்கள் அழித்துச் செல்வதை தடுப்பதற்கு இதுவரை எந்தவித நிரந்தர முயற்சிகளையும் உரியவர்கள் எடுக்கவில்லையென கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam