பாரதிபுரம் வீதியை புனரமைத்து தருமாறு கோரி போராட்டம்
கிளிநொச்சி - பாரதிபுரம் வீதியை புனரமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று (09-01-2026) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பாரதிபுரம் மேன்கமம் பிரதான வீதியின் சுமார் 1 கிலோமீற்றர் தூரம் மற்றும் பாரதி மகாவித்தியால வீதியின் 800 மீற்றர் தூரம் மண்வீதியாக காணப்படும் நிலையில் மழை வெள்ளம் ஏற்படும் போது நீரில் மூழ்கி பாதிப்படைகிறது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இதன்காரணமாக இவ்வீதிப்பகுதிகள் சேறும் சகதியுமாக, குன்றும் குழியுமாக மாறுவதால் இப்பகுதியூடாக பயணிக்கும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இந்த வீதியை தாமதிக்காது காபட் வீதீயாக அமைத்து தரவேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த போராட்டத்தை மக்கள் ஏற்பாடு செய்திருந்ததுடன் பாரதிபுரம் கிராம அபிவிருத்தி சங்கம் முன்னின்று நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

