லண்டனில் மாயமான இந்திய மாணவர்
இந்தியாவை சேர்ந்த மாணவரொருவர் கிழக்கு லண்டனில் தங்கியிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லெவுப்ரோ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் ஜி.எஸ்.பாட்டியா என்ற இந்திய மாணவரே கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தள பதிவு
இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க மூத்த தலைவரான மன்ஜீந்தர் சிங் சிர்சா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
G S Bhatia, a student of Loughborough University, has been missing since Dec 15. Last seen in Canary Wharf, East London.
— Manjinder Singh Sirsa (@mssirsa) December 16, 2023
Bringing to the kind attention of @DrSJaishankar Ji
We urge @lborouniversity & @HCI_London to join efforts in locating him. Your assistance is crucial. Please… pic.twitter.com/iFSqpvWVV8
குறித்த மாணவனின் பல்கலைக்கழக அடையாள அட்டை மற்றும் பிற சான்றுகளையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த செய்தியை மக்கள் பகிர வேண்டும் என அவர் கேட்டு கொண்டதுடன், ஏதேனும் தகவல் இருக்குமென்றால் தொடர்பு கொள்ளும்படி தொலைபேசி எண்களையும் பகிர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மாணவரை கண்டறியும் முயற்சியில் இந்திய தூதரகம் மற்றும் பல்கலைக்கழகம் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |