ஹோர்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட கப்பல்கள் குறித்து வெளியான தகவல்!
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் இன்று(18.4.2026) தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, கப்பல்களுக்கும் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல்
ஓமானின் வடகிழக்கே இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த இரண்டு கப்பல்களும் பின்வாங்கித் திரும்பியுள்ளன.

ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்குவதற்கு ஈரான் இன்று எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக, ஏராளமான வணிகக் கப்பல்கள் அந்த நீரிணை ஊடாகச் செல்வதைக் கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan