துறைமுகங்களை முற்றுகையிட்டால் ஹோர்முஸ் நீரிணை திறந்திருக்காது..! ட்ரம்ப்பை எச்சரித்த ஈரான்
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதால், துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை முடிவுக்கு வர வேண்டும் என தெஹ்ரான் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ஈரான் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் "பொய்யானவை" என்றும், இந்தப் பொய்களால் அவர்கள் போரில் வெற்றி பெறவில்லை, பேச்சுவார்த்தைகளிலும் நிச்சயமாக எந்த முன்னேற்றமும் காணப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை திறந்திருக்காது
மேலும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால், ஹோர்முஸ் நீரிணை "திறந்திருக்காது" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
۱- رئیس جمهور آمریکا در یک ساعت هفت ادعا مطرح کرد که هر هفت ادعا کذب است.
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) April 17, 2026
۲- با این دروغگوییها در جنگ پیروز نشدند و حتما در مذاکره هم راه به جایی نخواهند برد.
۳- با ادامهٔ محاصره، تنگهٔ هرمز باز نخواهد ماند.
ஈரானுடனான ஒப்பந்தத்திற்கு இனி எந்த சிக்கல்களும் இல்லை என்று ட்ரம்ப் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். அதே நேரத்தில், தெஹ்ரானுடனான வெளிப்படையான ஒப்பந்தங்கள் குறித்து சமூக ஊடகங்களில் தொடர்ச்சியான நம்பிக்கையூட்டும் செய்திகளையும் அவர் வெளியிட்டு வந்தார்.

ஆனால், ஈரானுடனான நமது பரிவர்த்தனை 100% நிறைவடையும் வரை கடற்படை முற்றுகை "முழு வீச்சில் தொடரும்" என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குண்டு வீசுவதற்கு தடை விதித்த ட்ரம்ப்
இதன்படி, லெபனானில் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுவதற்கேற்பவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வழித்தடத்தின்படியும், ஹோர்முஸ் நீரிணை அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் "முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது" என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
இதேவேளை, லெபனான் மீது குண்டு வீசுவதற்கு இஸ்ரேலுக்கு "தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று ட்ரம்ப் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நாட்டில் 10 நாட்கள் போர் நிறுத்தத்தின் முதல் நாளில், இஸ்ரேல் பல வாரங்களாக நடத்திய தாக்குதல்களின் போது தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலக்கரி விநியோகஸ்தரின் 9 பில்லியன் ரூபா முடக்கம்! மக்களுக்குப் பாதிப்பில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி
YOU MAY LIKE THIS VIDEO
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... சீரியலுக்கு இவ்வளவு மவுசா? Cineulagam