மிகிந்தலையில் குளத்தில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்ற சென்ற தந்தைக்கு நேர்ந்த கதி!
மிகிந்தலை- மருதன்குளம் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த இரு சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தை ஒருவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.4.2026) இடம்பெற்றுள்ளது.
மருதன்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
நேற்று மதியம் தனது நண்பருடன் குளத்திற்குச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இதன்போது அங்கு நீராடிக்கொண்டிருந்த தனது மகன் மற்றும் மற்றொரு சிறுவன் ஆகியோர் திடீரென நீரில் மூழ்குவதைக் கண்டு, அவர்களைக் காப்பாற்ற இவர் குளத்தில் குதித்துள்ளார்.
சிறுவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தந்தை, எதிர்பாராத விதமாகத் தான் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இருப்பினும், அவர் காப்பாற்ற முயன்ற 11 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam