ஆனமடுவ பகுதியில் கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி!
ஆனமடுவ, பரமாகந்த மலைப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.4.2026) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ஆனமடுவ, பரமாகந்தகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முறைப்பாடு
பரமாகந்த மலையின் பின்புறப் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காகத் தாம் கட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும், அங்கு சென்று பார்த்தபோது துப்பாக்கி வெடித்து அவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டதாகவும் 42 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, முறைப்பாடு செய்த மேற்படி நபரையே சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த நபர் எதற்காக அந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றார் என்பதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் நடவடிக்கை
சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த நீதிவான் விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சட்டவிரோத வேட்டை நடவடிக்கையால் ஏற்பட்ட இந்த உயிரிழப்பு குறித்து ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம் News Lankasri
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri