ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பலொன்றை அதிரடியாக தாக்கிய IRGC
ஹோர்முஸ் நீரிணையில் இருந்த எண்ணெய்க் கப்பலொன்று, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிப் படகுகளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) கண்காணிப்பு மையம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
இந்தச் சம்பவம் ஓமானுக்கு வடகிழக்கே 20 மைல் (32 கி.மீ.) தொலைவில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எண்ணெய்க் கப்பலும் அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என UKMTO மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்றபோது குறைந்தது இரண்டு வர்த்தகக் கப்பல்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... சீரியலுக்கு இவ்வளவு மவுசா? Cineulagam