இலங்கை விஜயம் குறித்து இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 6 ஆம் திகதி வரை இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த வருகை குறித்து தனது சமூக ஊடகக் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அவரது பதிவில், “எனது இலங்கை பயணம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறும். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய பயணத்தைத் தொடர்ந்து இந்தப் பயணம் நடைபெறுகிறது.
இந்திய பிரதமர்
பன்முகத்தன்மை கொண்ட இந்தியா - இலங்கை நட்பை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், மேலும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி விவாதிப்போம். அங்கு நடைபெறும் பல்வேறு சந்திப்புகளை நான் எதிர்பார்க்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இலங்கை வரும் இந்திய பிரதமர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.இதன்போது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
இதேவேளை இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்விலும் இந்திய பிரதமர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 11 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
